Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

இதன்படி ,

Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார்.

ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர்.

Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அக்கடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.

2900 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.

MiG-21, MiG-29, AN-32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

முன்னதாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(28/02/2024) அறிமுகம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *