FEATURED

FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஹவுதி கிளா்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது திடீர் தாக்குதல்!!

ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க இராணுவம் நேற்று(09/02/2024) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹவுதி கிளா்ச்சியாளா்களின் 4 ஆளில்லா படகுகள், கப்பல் அழிப்பு ஏவுகணைகளைத் தாங்கிய 7 வாகனங்களை தங்களது படையினா் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்ற Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

09 மறறும் 13 வயது சிறுமிகள் வீட்டில் வைத்து வன்புணர்வு….. 44 வயது நபர் கைது!!

09 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சிறுமிகளின் தாயுடன் தொடர்பை வைத்திருந்தவரான 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கலேவெல, பண்டாரகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது களுத்துறை, நாகொட, கல்லஸ்ஸ, நமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச் சிறுமிகளின் தந்தை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தாய் சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

8 நிமிடத்தில் உருவாக்கப்பட்ட 50″ நீளமும், 12 kg எடையும் கொண்ட இலங்கையின் மிக‌ப்பெ‌ரிய Pizza!

உலக பீட்சா தினமான நேற்று(09/02/2024) நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். பீட்சாவை உருவாக்க தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 04 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் பெப்பர்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை வெங்காயம் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்பட்டது. 50 அங்குல நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவை 08 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புத்தூர் பகுதியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் மீது போலீசார் துப்பாக்கி சூடு….. தடம்புரண்டதில் மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக லொறி ஒன்று காங்கேசன்துறை போலீசாரின் சைகைகளுக்கு மதிப்பளிக்காதவகையில் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளது. கு‌றி‌த்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த போலீசார் ஆள் நடமாட்டம் குறைவான புத்தூர் – சிறப்பிட்டி இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.   கு‌றி‌த்த சம்பவத்தில் குறித்த டிப்பர் ரக வாகனமானது தடம் புரண்டு யாழ் – பருத்தித்துறை 750 வீதி மணல்கோலமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த….. யாழ் பல்கலை மாணவனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!!

வட்டுக்கோட்டை காவல்துறையினர் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர், வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞனை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த காவல்துறை அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும்,   குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விருந்தில் ஏற்பட்ட மோதல்….. அநியாய சாவடைந்த 32 வயது இளைஞர்!!

மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என மத்துகம தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில், மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (32 வயது) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது, இந்த விருந்தில் கலந்துகொண்ட மத்துகம வெலிகட்டிய சண்டசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

“SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை…..” அந்த பெயரில் பலலடசம் நிதி திரட்டிய நபரை கண்டறிய பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை!!

கனடாவின் ரொறன்ரோவில் SickKids என்ற அமைப்பின் சார்பில் வீடு தோறும் நிதி திரட்டிய நபர் போலி என்றும் அவரை அடையாளம் காண உதவ வலியுறுத்தியும் காவல்துறையினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ காவல்துறை சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 2023 நவம்பர் மாதத்தில் இருந்தே தொடர்புடைய நபர் SickKids அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி ரொறன்ரோவில் பல வீடுகளுக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, உண்மையான SickKids அமைப்பின் உறுப்பினர் போன்று அவர் உடை அணிந்து, அடையாள அட்டையுடன் காணப்பட்டுள்ளதாகவும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த 16000 கால்நடைகள்!!

அவுஸ்ரேலியாவின் கடற்பரப்பில் சிக்கிய 16000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் பெர்த் துறைமுகத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் குறித்த கப்பல் செங்கடல் வழியாக தமது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. எனினும், ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில் குறித்த கப்பலின் பயணம் நீண்ட நாட்கள் எடுத்தது. இதன்காரணமாக, கப்பலில் இருந்த கால்நடைகள் பல வாரங்களாக சிக்கியிருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் பல வாரங்களுக்கு பிறகு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். அத்துடன்,Electrical Engineers Association Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் Read More

Read More