ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த 16000 கால்நடைகள்!!
அவுஸ்ரேலியாவின் கடற்பரப்பில் சிக்கிய 16000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் பெர்த் துறைமுகத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குறித்த கப்பல் செங்கடல் வழியாக தமது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.
எனினும்,
ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில்
குறித்த கப்பலின் பயணம் நீண்ட நாட்கள் எடுத்தது.
இதன்காரணமாக,
கப்பலில் இருந்த கால்நடைகள் பல வாரங்களாக சிக்கியிருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பின்னர் பல வாரங்களுக்கு பிறகு அவை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.