09 மறறும் 13 வயது சிறுமிகள் வீட்டில் வைத்து வன்புணர்வு….. 44 வயது நபர் கைது!!
09 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சிறுமிகளின் தாயுடன் தொடர்பை வைத்திருந்தவரான 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கலேவெல, பண்டாரகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது களுத்துறை, நாகொட, கல்லஸ்ஸ, நமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச் சிறுமிகளின் தந்தை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தாய் சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் சிறுமிகளை வீட்டில் வைத்து வன்புணர்வு செய்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி அவர்கள் இருவரும் வன்புணர்விற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.