“SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை…..” அந்த பெயரில் பலலடசம் நிதி திரட்டிய நபரை கண்டறிய பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை!!

கனடாவின் ரொறன்ரோவில் SickKids என்ற அமைப்பின் சார்பில் வீடு தோறும் நிதி திரட்டிய நபர் போலி என்றும்

அவரை அடையாளம் காண உதவ வலியுறுத்தியும் காவல்துறையினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோ காவல்துறை சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில்,

2023 நவம்பர் மாதத்தில் இருந்தே தொடர்புடைய நபர் SickKids அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி ரொறன்ரோவில் பல வீடுகளுக்கு சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி,

உண்மையான SickKids அமைப்பின் உறுப்பினர் போன்று அவர் உடை அணிந்து, அடையாள அட்டையுடன் காணப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அமைப்பின் சார்பில் நிதி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நபர் இனி ஏதேனும் குடியிருப்புகளில் அல்லது பொதுமக்கள் அந்த நபரை எங்கேனும் அடையாளம் காண நேர்ந்தால் அவரினை அணுகாமல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் கோரியுள்ளனர்.

SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை என்றும், குடியிருப்புகளுக்கு உறுப்பினர்களை அனுப்பவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *