ஆண் குழந்தைக்காக கர்ப்பினிப்பெண்ணின் உச்சந்தலையில் ஆணி அறைந்த வைத்தியர் (புகைப்படங்கள்) !!

ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென தெரிவித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்று, தனது தலையில் இருக்கும் ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அவர்,

“நான் கர்ப்பமாக இருக்கிறேன்.

இந்தப் பிரசவத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கேட்டுக் கொண்டேன்.

அவரோ, எனது தலையில் 5 சென்ரிமீற்றர் அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார்.

அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே,

அதை அகற்ற வேண்டும்” என்றார்.

“அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார்.

பின்னர் தான் அவர் தலையில் ஆணியை அந்த வைத்தியர் அறைந்தது தெரியவந்ததாக வைத்தியர்கள் கூறினர்.

இதையடுத்து வைத்தியர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலை சி.சி.ரிவி கமராக்களின் காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை தேடி வருதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் அவரை விசாரித்து அந்த உள்ளூர் வைத்தியரை கைது செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *