அடுத்து ஒரு முக்கிய உற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது நாட்டில்!!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திரிபோஷ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே திரிபோஷ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Read more

ஆண் குழந்தைக்காக கர்ப்பினிப்பெண்ணின் உச்சந்தலையில் ஆணி அறைந்த வைத்தியர் (புகைப்படங்கள்) !!

ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென தெரிவித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்று, தனது தலையில் இருக்கும் ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் Read More

Read more

தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!

வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்  மண்டான் பகுதியில்  அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக, காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read more