ஆண் குழந்தைக்காக கர்ப்பினிப்பெண்ணின் உச்சந்தலையில் ஆணி அறைந்த வைத்தியர் (புகைப்படங்கள்) !!

ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென தெரிவித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்று, தனது தலையில் இருக்கும் ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read more

“Covid-19 Virus கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால் அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து – குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன்….” வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து!!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். இதன்போது Read More

Read more

திருகோணமலைலையில் 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால்  (31) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் 9,815 பேர் தொற்றுக்கு Read More

Read more

யாழில் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!!

தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பிணிகள் தமது கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாதென மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் அ.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏழு கர்ப்பிணிப் பெண்கள் இறந்திருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்குள் இது மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.இதுவே இந்த கொரோனா தொற்று தாக்கத்தின் கடுமையை உணர்த்தும்.

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கலில் குறைபாடு – மருத்துவ நிபுணர்கள் குற்றச்சாட்டு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய Read More

Read more

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை Read More

Read more

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தொடர்பில் விசேட மருத்துவர்களின் பரிந்துரை

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட இதனை தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஆலோசனை விசேட வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டது. இதற்கு அந்த குழு அனுமதி வழங்கியதுடன், இதற்கான திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more

கர்ப்பிணித்தாய்மாருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றினால் 130 கர்ப்பிணித்தாய்மாருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கர்ப்பிணியான நீங்களும், கருவிலுள்ள உங்கள் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். இதற்காக கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு Read More

Read more