பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 வது சீசனில் இருந்து வெளியேறியவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை 8 பேர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் 10 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் தான் அது போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *