தற்சமயம் இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு….. இலங்கை – செவ்வாய் கிரகத்திற்கிடையில் ஒற்றுமை!!

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.

அதாவது,

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த குழு இலங்கை வந்துள்ளது.

நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கையை சேர்ந்தவரான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணங்களை மேற்கொண்டு பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில்,

களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்திற்குரிய கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் புவியியல் அம்சங்கள்

 செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்தநிலையில்,

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் அவசியம்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *