356 பயணிகளுடன் சிங்கப்பூர் – லண்டன் சென்ற விமானம் திடீர் திட்டமிடப்படாத அவசர தரையிறக்கம்!!

சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய பயணிகள் விமானம் திடீரென அசர்பைஜான்(Azerbaijan) நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

356 பயணிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை(23/12/2022) நள்ளிரவு 12.44 மணிக்கு கிளம்பிய விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லவிருந்தது.

இந்நிலையில்,

விமானமானது அசர்பைஜான்(Azerbaijan) நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக  Swedish Flightradar 24 தெரிவிக்கையில்,

அவசர நிலைக்கான தகவல் தொடர்பு குறியீடுகளை தொடர்ந்து விமானம் அசர்பைஜான்(Azerbaijan)

தலைநகர் பாகுவில் உள்ள ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகு விமான நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில்,

356 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும்,

சரக்குகள் வைக்கும் பகுதியில் புகை கிளம்பிய காரணத்தால் விமானத்தை திடீரென தரையிறங்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பாகுவில் எவ்வளவு நேரம் இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *