குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற குடும்ப பெண்ணுக்கு சக பணியாளரால் நேர்ந்த துயரம்!!

குவைத்திற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் சக பெண்ணால் கூரிய ஆயுதத்தல் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டநிலையில் நேற்று திங்கட்கிழமை அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

No. 121 / 1A, முதலாவது வீடு , மகாவ, எனும் முகவரியைச் சேர்ந்த சுவர்ணவதி ஹேரத் முதியான்சலாகே ( வயது 39) என்ற குடும்பபெண் கடந்த 08.03.2018 அன்று வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத்துக்கு சென்றார்.

இவரது கணவர் அபேசிங்க முதியான்சலகே விஜேபால ஜெயதிலக(55) மற்றும் 15 வயதான மகள் தேசானி வாசன இருவரும் இலங்கையில் உள்ளனர்.

குவைத்துக்கு சென்ற சுவர்ணவதி அங்கு எத்தியோப்பிய பெண் ஒருவருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் தனது இரண்டு வருட சேவையை முடித்துக் கொண்ட சுவர்ணவதி நாடு திரும்புவதற்கு தயாரான நிலையில் 13.04.2021 அன்று சக பணியாளரான எத்தியோப்பிய பெண்ணால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.

சுவர்ணவதியின் கழுத்து,கால் மற்றும் வலது, இடது ஆட்காட்டி விரல்கள் ஆகியவற்றின் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சுவர்ணவதி தனது பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினால் தன்னால் தனியாகவே வீட்டுவேலையை செய்ய வேண்டி ஏற்படும் என்ற விரக்தியினாலேயே எத்தியோப்பிய பெண் அவரை தாக்கியதாக ஸ்ரீலங்கா பொலிஸ் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்து, இறுதி சடங்குகளை ஒரே நாளில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நடத்துமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நேற்று (10) உத்தரவிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை பொறுப்பதிகாரி பன்னரத்ன, ஆய்வாளர் ஜெயநாத் வனசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.பக்னநந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *