26 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சரியாக கூறப்படாத உயிரிழப்புகள் – கவலைக்கிடமான நிலையில் பலர்….. முழுமையான அலசல்!!
முதலாம் பகுதி
பூண்டுலோயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் நேற்று(09/07/2023) மாலை வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன்
இதில் காயமடைந்த 24 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்கள் பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்தில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை,
பொலன்னறுவை – மன்னம்பிடிய, கொட்டளி பாலத்திற்கு அருகில் சற்றுமுன் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் பகுதி
பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் நேற்று(09/07/2023) விபத்திற்குள்ளாகியுள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலன்னறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று
விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்,
விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன்
இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு தெரிவித்தார்.
விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் விபத்தில் உயரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.