தனக்குத் தானே தீ வைத்த 19 வயது மாணவி !!

மாணவி ஒருவரை சகோதரன் எச்சரித்ததால் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி, கலஹா பிரதேசத்தில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் இவர் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசி ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவரது வீட்டின் குளியலறையில் மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை நேற்று கண்டி பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் மஹகெதரவின் பணிப்புரையின் பேரில் கலஹா காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *