FEATUREDLatestNewsTOP STORIES

59 வயதில் உலக சாதனை படைத்த யாழ் தமிழர்!!

7நிமிடம் 48செக்கன்களில் 1550KG எடை கொண்ட ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(09/07/2023) பிற்பகல் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில்

இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும்,

சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன், சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *