FEATUREDLatestNewsTOP STORIES

ஒரே தடவையில் தனி ஒருவனாக மூன்று பிரிவுகளில் புதிய சாதனை படைத்த யாழ் இளைஞன்!!

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று மூன்று தங்க பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,

squat பிரிவில் 330 கிலோ கிராமையும், benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அத்துடன்,

குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் மூன்று சாதனைகளை படைத்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதை அடுத்து அவருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *