நுகேகொடை, தெல்கந்த பகுதியில் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!!
நுகேகொடை, தெல்கந்த பகுதியில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் உள்ள ரிவி தெரண கலையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒளிப்பதிவு உபகரணங்களை ஏற்றி வந்த லொறியுடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் கார் மோதியதில் தீப்பற்றியதில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.
காரில் பயணித்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.