FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்க விமான நிலையத்திலிடுந்து 5KM தூரத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியது….. 75000hp சக்தி கொண்ட சிங்கப்பூர் விமானம்!!

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும்
மேலே உயர்த்தப்பட்டதால் கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்த இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில

தரையிறங்குவதற்காக வந்த நிலையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததனால் விமானி திடீரென
விமானத்தை மேல் நோக்கிச் செலுத்தியுள்ளார்.

அந்நேரம்,

விமானத்தின் எஞ்சின் வெளியிட்ட அதிக சத்தத்தினாலும் அதனால் தொடர்ச்சியாக வெளியான பலத்த காற்றையும் அதிர்வையும் வெளியேற்றியுள்ளது.

இதனால்,

குறித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விமானத்தினுள் 292 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் பயணித்ததுடன் இவ் விமானத்தின்
ஒரு இயந்திரம் மாத்திரம் 75000 குதிரை வலுசக்தி கொண்டது.

இந்நிலையில்,

குறித்த விமானம் இரு இயந்திரங்களைக் கொண்டது.

தாழ்வாகப் பறந்து தரையிறக்க முற்பட்ட இவ்விமானம் பயணிகளின் பாதுகாப்புக் கருதி திடீரென மேலுயர்த்தப்பட்டதுடன்

இதனால்,

விமான நிலையம் தொடக்கம்  5 கிலோ மீட்டர் நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகள் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் புதன்கிழமை (19/07/2023)காலையில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *