FEATUREDLatestNewsTOP STORIES

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை….. வடமாகாண சித்தி விபரங்கள்!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 231,982 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 10,863 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி (9A) பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,

498 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,

வடக்கு மாகாணத்தில் இருந்து 16 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இதில்,

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3009 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில்,

193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

மேலும்,

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 பேருக்குக்கும்,

வடமராட்சி கல்வி வலயத்தில் 56 பேருக்கும்,

வலிகாமம் கல்வி வலயத்தில் 53 பேருக்கும்,

கிளிநொச்சி கல்வி வலயத்தில் 49 பேருக்கும்,

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 47 பேருக்கும்,

மன்னார் கல்வி வலயத்தில் 39 பேருக்கும்,

தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 பேருக்கும்,

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 பேருக்கும்,

துணுக்காய் கல்வி வலயத்தில் 9 பேருக்கும்,

தீவக கல்வி வலயத்தில் ஒருவருக்கும்9ஏசித்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *