2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி….. முதலாவதாக வெளியேறிய கட்டார் அணி!!
2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில்,
கட்டார் அணிக்கான இரண்டாவது போட்டியை செனக்கல் அணி 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் குழு “ஏ” புள்ளிப் பட்டியலில் கட்டார் அணி கடைசியிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் கட்டார் அணி போட்டிதொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும்.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்கிழமை(29/11/2022) நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்கிறது.
எனினும்,
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால்அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன்,
உலகக் கிண்ணத் தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.
இது கட்டார் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.