நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் OTT ரிலீஸ் திகதி அறிவிப்பு!!
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்‘.
இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில்,
இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி,
இப்படம் வருகிற ஜூலை 26-ஆம் தேதி அமேசான் ஓடிடி(Amazon OTT) தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனை,
அமேசான் நிறுவனம் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும்,
படத்தின் வெற்றியை நம்பி நாராயணன் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“நடிகர் மாதவன்” அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……..