FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விநியோகிக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!!

எரிசக்தி அமைச்சகம் தேசிய எரிபொருள் உரிமம் அல்லது Q.R. வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (19/07/2022) பிற்பகல் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் சின்னத்திற்கும் கடைசி இலக்கத்தின் பதிவு இலக்கத்திற்கும் என இரண்டு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும்,

அதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கே.ஆர். சின்னம் அமுல்படுத்தப்படும் போது கையடக்க தொலைபேசிகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ நேற்று (19/07/2022) காலை தெரிவித்தார்.

இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *