இங்கிலாந்தில் லண்டன் உட்பட பல இடங்களில் பாரிய தீப்பரவல்!!
இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலையை தொடர்ந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பல குடியிருப்புகள், கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
பெருநகர காவல்துறை சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக லண்டன் முழுவதும் பல தீவிபத்துகள் ஏற்படுத்தியுள்ளது.
வென்னிங்டனிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீயணைக்கும் வாகனங்கள் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக
தீயணைக்கும் வீரர்களை சம்பவ இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வாகன ஆதரவை வழங்குகிறோம்.
மேலும்,
எங்களால் முடிந்த ஆதரவை வழங்க அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என மெட் காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
LFB அறிவுரைகளை லண்டன் வாசிகள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக வரும் மணிநேரங்களில் காவல்துறை அதிகாரிகள் திறந்த வெளிகளில் ரோந்து செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு,
இன்றிரவு(20/07/2022) பார்பிக்யூ அல்லது நெருப்பு வைக்க வேண்டாம் எனவும்,
உடைந்த போத்தல்கள் அல்லது கண்ணாடிகளை /தரையில் விடாதீர்கள் எனவும்,
சிகரெட்டை பாவிக்க வேண்டாம் எனவும் லண்டன் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.