உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் போர்ப்பதற்றம்!!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் ரஷ்யாவும் பெலாரஸும் பெருமெடுப்பிலான 10 நாட்கள் கூட்டு இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.
பெலாரஸ், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனுடன் நீண்ட எல்லையைக் கொண்டுள்ளது.
பனிப்போருக்குப் பிறகு பெலாரஸுக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய வரிசைப்படுத்தல் என்று நம்பப்படும் இந்த பயிற்சிகளை பிரான்ஸ் இது ஒரு “வன்முறை சைகை”என தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த பயிற்சி ஒரு “உளவியல் அழுத்தம்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
எல்லையில் 100,000 துருப்புக்களைக் குவித்த போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் தாம் கொண்டிருக்கவில்லை என ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.