பண்டத்தரிப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 17வயது மாணவி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

யா/ மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் மாணவி செல்வி சுதர்சன் சதுர்சிகா என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளா‌ர்.


இன்னும் ஒருசில நாட்களில் அதாவது இமமாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவியை காலன் கவர்ந்துவிட்டான்.

கல்விவானில் சிறகடித்துப் பறந்து உயர்ந்த இலட்சியத்துடன்.

வாழத்துடித்த பறவை தீயில் கருகிவிட்டது. தமது பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூற. வார்த்தைகளில்லை.

தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,

சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *