LatestNewsWorld

உலகளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை அறிய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆய்வை நடத்தினர்.

கடந்த 50 ஆண்டுகளில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கலாசார ரீதியாக விருப்பம் கொண்ட நாடுகளில், பாலினம் பார்த்து குழந்தையை முடிவு செய்யும் போக்கு இன்னமும் நிலவுகிறது.

அது வருங்காலத்தில் சமூக ஒற்றுமையைக் கீழறுக்கும் என்று ஆய்வு கூறியது.

மேலும் இத்தகைய போக்கால், 2030 ஆண்டு உலகின் மூன்றில் ஒரு பங்கினரில், இளம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.

இது சமூக விரோத, வன்முறை நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும்.

தென் கிழக்கு ஐரோப்பா, தெற்காசிய, கிழக்காசிய நாடுகளில், கடந்த 40 ஆண்டுகளில், குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *