கோதுமை மாவின் விலை 40/= அதிகரிப்பு….. பாண், பனிஸ், கொத்து தொடக்கம் உணவுப் பொதிவரை அனைத்தின் விலையும் கடுமையாக உயர்வு!!

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

 

இதன்படி,

ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

மேலும்,

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதேவேளை,

எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உணவுப் பொதியொன்றின் விலையும் உயர்வடைவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 

அதனடிப்படையில்,

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதைய விலையின் அடிப்படையில், உணவுப் பொதியொன்று 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

இதேவேளை,

பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

 

மேலும்,

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *