சீன தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல சிங்கள நடிகைக்கு தொற்றியது கொரோனா!!
பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது பேக்புக் பக்கத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
தன்னுடன் நடித்த பலருக்கு தொற்று இருப்பதையடுத்து, ஜூலை 31ஆம் திகதி முதல் தாம் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும்,
தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தான் சீனாவின் சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.