LatestNews

மனைவியையும் மருமகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்த 70 வயது முதியவர்!!

அம்பலாந்தொட – ஹுங்கம, எத்படுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் மருமகளை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரு பெண்களையும் வீட்டின் முற்றத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஹங்கம பொலிஸார் கூறுகின்றனர்.

இதில் பலியானவர்கள் ஹுங்கம- எத்படுவ பகுதியில் வசிக்கும் வீரசிங்க பட்டிய கமகே பிரேமாவதி (67) மற்றும் அவரது மருமகள் கீகனகே ரம்யா பிரியதர்ஷனி சந்திரகாந்தி (39) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் செய்த 70 வயதான நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் அதே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கொழும்பு புறநகர் பகுதியில் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *