கட்டுப்பாட்டை இழந்த ரொக்கெட்! பூமியைத்தாக்கும் ஆபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

21 டொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *