WhatsApp மூல காதலனை நம்பி சென்ற 15 வயது காதலியை….. பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபர் தலைமறைவு!!
கண்டியில் WhatsApp செயலி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கண்டி காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார்.
கண்டிப் பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி ஒருவருக்கும்,
அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் WhatsApp மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்,
அண்மையில் சிறுமியை நேரில் சந்தித்த குறித்த நபர் சிறுமியை ஏமாற்றி கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
சிறுமி கண்டி காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் தேடப்பட்டு வருகின்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.