என்னை கைது செய்ய முடியாது – போலீசுக்கு சவால் விடும் மீரா மிதுன்!!
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் மீது இந்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மீரா மிதுன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
குறிப்பாக அந்த வீடியோவில் “என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும். 5 வருடமா இதற்குதான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் விதமாக மீரா மிதுன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.