‘காதலுக்கு ஒரு மரம்’….. காதலர் தினத்திற்கு அரசாங்கத்தின் புதிய திட்டம்!!

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.

குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு,

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் ,பாதுக்க கிறீன் யுனிவர்சிட்டி மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காலை 9.00 மணிக்கு நடத்துகின்றன.

கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *