வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு திறந்துவைக்கப்பட்ட்து!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில்,

அதிதியாக கலந்து கொண்ட அரச தலைவர் பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பல்கலைக்கழகமானது,

1991ஆம் ஆண்டு வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *