ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்றது இந்தியா!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது.

ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *