இலங்கையை தாக்குமா சுனாமி? சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!
இந்து சமுத்திரத்தில் அந்தமான் தீவுகளுக்கு அருகாமையில் 95 கிலோ மீட்டர் ஆழமான கடல் பகுதியில் இன்று காலை 9.12 மணிக்கு ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சற்று முன்னர் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இதனால் கரையோர பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் பீதியடையத்தேவையில்லை.
முன்னர் கிடைத்த செய்தி
இந்திய கடல் பிராந்தியத்தில் நிக்கோபார் தீவுக்கருகாமையில் 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டிருப்பதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திணைக்களம் விஷேட அறிக்கையொன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கரையோர பகுதிகளிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் வாழும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் வெளியிடும் தகவல்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.