இன்னமும் தீர்மானிக்கவில்லை! தேவை ஏற்பட்டால் பயணத்தடை வரும்!!!!
எதிர்வரும் 14ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.