கார் விபத்து குறித்து யாஷிகாவின் வாக்குமூலம்: தற்போது அவரது நிலை என்ன??

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவின் தற்போதைய நிலை குறித்து அவரது தோழி ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார் என்பதும் அவரது தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கார் ஓட்டும்போது மதுபோதையில் இல்லை என்பதும் மருத்துவ பரிசோதனையில் இருந்து தெரியவந்ததாக கூறப்படுகிறது.

யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் யாஷிகாவின் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு அடைந்ததாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது யாஷிகாவின் நெருங்கிய தோழியாக இருந்த ஐஸ்வர்யா தத்தா அவரை நேரில் சந்தித்து யாஷிகா நலமாக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *