நாளை(03/11/2021) இருளில் மூழ்குமா நாடு!!

மின்சார விநியோகத்தை நிறுத்தி இதன் மூலம் பொது மக்கள்  வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

அதேபோல் தாம் போராட்டத்தில் ஈடுபடும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென என்றும் தெரிவித்தார்.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும் நாளை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

நவம்பர் 3ஆம் திகதி மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் இந்த போராட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் இருந்து அவர்கள் வருவார்கள் என்பதால், தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால், சிக்கலை சரிசெய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *