1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய பெண் பொறியாளர்!!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்விற்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர்  ஷிஷி பிரபா தம்பதியினரின் மகள் சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார்.

பின் 2016 ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அவர் டெல்லி டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பி-டெக் படிப்பை 2021 மே மாதம் சம்ப்ரீத்தி முடித்தார்.

சம்ப்ரீத்திக்கு ஃப்ளிப்கார்ட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் வேலை வழங்க தயாராக இருந்த நிலையில்  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தேர்ச்சி அடைந்து அந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.44 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியது.

இந்த நிலையில்,

கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக சம்ப்ரீத்தி விண்ணப்பிக்க அவருக்கு ஆன்லைன் மூலம் நேர்காணல் நடைபெற்றது. மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த நேர்காணல் அனைத்திலும் அவர் தேர்ச்சி பெற ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது சொந்த முயற்சியின் காரணமாக கூகுள் நிறுவனத்தில் விண்ணப்பித்து வேலை பெற்ற சம்ப்ரீத்தி சீக்கிரத்தில் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்க உள்ளார்.

அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *