பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!!
பிரபல பாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் அகாடமி ஒழுங்கு நடவடிக்கை குழு, 10 ஆண்டுகள் அவருக்கு தடை விதித்திருக்கிறது.
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சமபவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள்- மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அகாடமி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். அத்தோடு,
அகாடமியிலிருந்து தானாக முன் வந்து ராஜினாமா செய்தார்.
ஆனால் சம்பவம் நடந்த அன்று இரவே கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
அதோடு அன்று இரவு ஆஸ்கர் அகாடமி நடத்திய விருந்தில் கலந்து நடனம் ஆடி கொண்டாடியிருக்கிறார்.
இது சர்ச்சை ஆனவுடன் அகாடமி, நாங்கள் ஸ்மித்தை அரங்கை விட்டு வெளியேற சொன்னோம்.
ஆனால் அவர் செய்யவில்லை என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.
இது பற்றி கிறிஸ் ராக் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் கேட்டும் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மீது எந்த புகாரும் தர மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
தான் மார்ச் 27 அன்று பகலில் கூடிய ஆஸ்கர் அமைப்பாளர்கள் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்படி,
ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்கள் முடிவை நேற்று அறிவித்தது.
இதன்படி வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்தது.
அதோடு அந்த அசாதரணமான சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடித்த கிறிஸ் ராக்கிற்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறது ஆஸ்கர் அகாடமி.