333000 ஐ தொடும் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு!!

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு 333000 ஐ தொடும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

 

2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.

 

இதற்கு முன்னர்,

2014 ஆம் ஆண்டிலேயே 300000 க்கும் அதிகமான தொழிலாளர் இடம்பெயர்வு பதிவாகியிருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய இடங்களுக்கே அதிகமானோர் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதற்கிடையில்,

ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்த பின்னர் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து பண வரவு உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *