திருகோணமலையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை- தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சுவின் சகோதரர் பொலிஸார் வசம்!

திருகோணமலை நகரில் 38 இலட்சம் ரூபா பொறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரை ஏற்கனவே பொலிஸார் கைது தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், திருகோணமலையில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருகேணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த 8 ஆம் திகதி 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திருக்கோணமலை – கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகு ஒன்றில் வந்துள்ள கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவரும் தற்போது தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சு எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சந்தேக நபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார் சந்தேக நபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இக்கொள்ளை சம்பவத்துடன் வேறு நபர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்ற ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *