LatestNews

”தினமும் 4 மணிநேர மின் வெட்டு” மக்களை தயாராக இருக்குமாறு அறிவுறுத்து…

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், மின் வெட்டை எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு (Saumya Kumarawadu) எதிர்வு கூறியுள்ளார்.

நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு, பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து  வெளியிடுகையில்,

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுகின்றது.

அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது.

இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது.

நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும், அதனால் நீர் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தல் ஆகிய காரணங்களினால், மின் வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *