குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் சென்ற குறித்த இழுவை படகு விபத்து!!

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

 

புங்குடுதீவுகுறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது.

இதனால்,

படகின் அடிப்பகுதியில் துளை உண்டாக,

உள்ளே தண்ணீர் கசிவு ஏற்பட்டு அது ஆபத்தில் உள்ளதாக வடக்கு கடற்படை கட்டளை பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், கடலோர ரோந்து படகுகள் மற்றும் இலங்கை கடற்படையின் இரு சிறிய படகுகளை பயன்படுத்தி விபத்தில் சிக்கிய படகையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும்,

கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கையின் காரணமாக பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தவிர்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *