ரம்புக்கனையில் விசேட அதிரடிப்படை,இராணுவம் குவிப்பு
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டை அடுத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை மா அதிபரி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் போராட்டம் நடத்தியவர்கள் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அதனைத் தடுக்க காவல்துறையினர் பலத்தை பயன்படுத்தியதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.