நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 வீதம் வரை கடந்த சில நாட்களில் அதிகரிப்பு….. சுகாதார அமைச்சு!!
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால்,
சுகாதார வழிகாட்டல்களை மீண்டும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி அறிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில்,
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் குறித்து மக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டாம் என விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
60 வயதிற்கும் மேற்பட்ட சுமார் ஒரு மில்லியன் மக்கள் இதுவரை மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே,
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று(29/07/2022) உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் நால்வர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
அத்துடன்,
இலங்கையில் நேற்றைய தினம்(29/07/2022) 143 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.