ஸ்கேன் அறையிலிருந்து அழுதுகொண்டு வந்து தன்னை வைத்தியர் பலாத்காரம் செய்ததாக கூறிய 15 வயது சிறுமி….. மருத்துவ அறிக்கையில் எதிர்மாறான தகவல்!!
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை
அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் கதிரியக்கப் பிரிவில் கடந்த 08ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 07ம் திகதி சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 08ஆம் திகதி சிறுமியின் வயிற்றை ஸ்கான் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையியல்,
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதாக குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,
ஆரம்ப சிகிச்சையின் பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு தயாராகி படுக்கையில் இருந்த சிறுமியை மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,

நோயாளர் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும் தாதியர் விசாரித்தபோது
ஸ்கேன் அறையில் தனக்கு ஏற்பட்ட விபரீதத்தை வெளிப்படுத்தினார் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நோயாளர் அறைக்கு பொறுப்பான வைத்தியர் வழங்கிய தகவலின் பேரில் வைத்தியசாலை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும்,
கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜானகி வருஷஹென்னடி நோயாளியை பரிசோதித்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை / செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.
எனினும்,
நோயாளியின் முறைப்பாட்டை புறக்கணிக்க முடியாது என்பதால் காலி காவல்துறையின் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.