அதிபர், ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது!!

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து நேற்றைய தினம் அம்பாறை வலய கல்வி அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி,

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலய கல்வி கணக்காய்வாளர்களின் கூட்டத்தில் கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அம்பாறை வலய கல்வி அலுவலகத்தின் கணக்காய்வாளர் எல்.ரி. சலித்தீன் ZEO/AAC/CC/01 என்ற கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள துண்டுச்சீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பளத்தில் கிடைக்காது எனவும் கடிதத்தில் கணக்காய்வாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *