ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் விளையாடிய சிறுவர்கள் மரணம்!!

இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று(01/07/2023) மாலை ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 15 வயதுடைய இருவரே உயிரிழந்தவர்களாவர். சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும் இதன்போது, அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து Read More

Read more

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம்….. அமைச்சர் ஜீவன் தொண்டமான்!!

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09/06/2023) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய நீர் கட்டண அறவீடுகளின்படி ஒவ்வொரு மாதமும் 425 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் மலையக மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுக்க அதனை உபயோகப்படுத்த முடியும். இதேவேளை, நீர் Read More

Read more

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல்!!

உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து 2018 செப்டெம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Read more

வெற்று தண்ணீர் போத்திலுக்கு இனி 10 ரூபா!!

குடிநீரை பயன்படுத்தி விட்டு எறியப்படும் வெற்று பிளாஸ்டிக் போத்தலை மீள வழங்கினால் 10 ரூபாவை செலுத்த எதிர்பார்த்துள்ளோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சுத்தமான குடிநீர் போத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குடிநீர் போத்தல் அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய விற்பனையாளரான லங்கா சதொச ஊடாக குடிநீர் போத்தல் ஒன்றை Read More

Read more

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனின் மத்திய உயா் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலத்தின் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னா், 1, 731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. அந்தப் பாறை மாதிரியை Read More

Read more

48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்….. அவதானமாக இருங்கள்!!

வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் கிழக்கு மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்கு விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். இதேவேளை, Read More

Read more

கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் மிக அதிகரிப்பு….. எந்த நேரத்திலும் வான்பாயலாம்!!

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக கிளிநொச்சி – கனகாம்பிகை  குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் எந்த நேரத்திலும் வான்பாயலாம் என கிளிநொச்சி மக்களுக்கு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. குறித்த குளத்தின் நீர்மட்டம் 10அடி 6 அங்குலத்தை கொள்ளளவாக கொண்டது. ஆனால் தற்போது 9 அடி 9 அங்குலமாக  நீர்மட்டம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும்  மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலம் Read More

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி தொடக்கம் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, 1,2,3,7,8,9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதேபோல், கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Read more

கொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு!!

கொழும்பு 01 தொடக்கம் 11 வரையான பிரதேசங்களில் (4,5,6 தவிர்ந்த) எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Read more